Categories
தேசிய செய்திகள்

“குறுகிய காலத்தில் அதிகம் லாபம்” போஸ்ட் ஆபீஸில் உங்களுக்கான சூப்பர் திட்டம்…. இதோ முழு விபரம்….!!!!

பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வதற்கு வங்கி மற்றும் தபால் அலுவலகத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் தான் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிலையில் குறுகிய காலத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற விரும்புவர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் ஒரு சூப்பரான திட்டம் இருக்கிறது. அதாவது போஸ்ட் ஆபீஸில் டைம் டெபாசிட் கணக்கை தொடங்கிக் கொள்ள வேண்டும். இதில் 8.50 லட்ச ரூபாய் முதலீடாக நீங்கள் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் 5.5 சதவீதம் வட்டி கிடைப்பதால், 3 ஆண்டுகள் முடிவில் 10 லட்சம் ரூபாயை பெற முடியும். நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு 3 வருடத்தில் ரூ. 1.51 லட்சம் வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச வரம்பு என்று எதுவும் கிடையாது.

இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்டோர் இணையலாம். அதற்கும் குறைவான வயது உடையவர்கள் தங்களுடைய பெற்றோர்களின் பெயரில் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடங்கள் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்யலாம். ஒருவேளை இடைப்பட்ட காலத்திற்குள் பணத்தை எடுக்க விரும்பினால் கூட எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் போஸ்ட் ஆபீஸ் இல் சில விதிமுறைகள் இருக்கிறது. அதே சமயம் முதலீடு செய்த காலத்தில் 6 முதல் 12 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பணத்தை பெறும் போது முதலீடு செய்த தொகைக்கு இணையான வட்டி கிடைக்கும். மேலும் 2,3 அல்லது 5 வருடங்களுக்கு முன்பாக பணத்தை எடுக்கும்போது மொத்த தொகையிலிருந்து 2 சதவீதம் வட்டி கழிக்கப்படும்.

Categories

Tech |