ஊழியர்கள் நலன் கருதி மத்திய அரசு 4 புதிய தொழிலாளர் குறியீடுகளை விரைவில் நடைமுறைபடுத்த போவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி தெரிவித்து இருக்கிறார். இந்த புது தொழிலாளர் குறியீடானது நடைமுறைக்கு வந்தபின் , ஊழியர்களின் சம்பளம், விடுப்பு, வருங்கால வைப்புநிதி மற்றும் கிராஜுவிட்டி ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதன் வாயிலாக கிராஜுவிட்டி பெறுவதற்கு ஊழியர்கள் தொடர்ந்து 5 வருடங்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை இருக்காது. எனினும் அரசு இது தொடர்பாக தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள கிராஜுவிட்டி விதியின்படி ஒரு ஊழியர் கிராஜுவிட்டி பெற வேண்டுமெனில், அந்நிறுவனத்தில் தொடர்ந்து 5 வருடங்கள் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணியாற்றினால்தான் அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்படும்.
5 வருடங்களுக்கு பின் அவர் நிறுவனத்தைவிட்டு வெளியேறியதும் சம்பளத்தின் அடிப்படையில் அந்நபருக்கு கிராஜுவிட்டி கொடுக்கப்படுகிறது. தற்போது ஒருவர் ஒரு நிறுவனத்தில் 10 வருடங்கள் பணிபுரிகிறார் எனில், கடைசி மாதத்தில் அவரது கணக்கில் ரூபாய்.50,000 சேரும். அவரது அடிப்படை சம்பளமானது ரூபாய்.20,000 மற்றும் DA ரூபாய்.6,000 மொத்தம் ரூ.26000 ஆக இருக்கும். இந்த ரூபாய்.26,000ஐ வைத்து தான் கிராஜுவிட்டி கணக்கிடப்படும். இவற்றில் கிராஜுவிட்டி 26 நாட்களாக எடுத்துக் கொள்ளப்படும்.
# 26,000 / 26 நாளொன்றுக்கு ரூபாய்.1000
# 15X1,000 = 15000
ஊழியர் 15 வருடங்கள் பணியாற்றினால் அவர் மொத்தம் ஆக 15X15,000 = ரூபாய்.75000 கிராஜுவிட்டியாக பெறுவார். இப்போது கிராஜுவிட்டி பற்றி வெளியாகி இருக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒருநபர் எந்த ஒரு நிறுவனத்திலும் ஒரு வருடம் பணிபுரிந்தாலும் அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்படும். இம்முடிவை முக்கியமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களுக்காக அரசாங்கம் எடுத்து இருக்கிறது.