Categories
மாநில செய்திகள்

வெடிகுண்டு கலாசாரத்தை தடுக்க வேண்டும் – ஈபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். கோவை மட்டும் இன்றி  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபட்டவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக மாவட்டத்தில் ஆங்காங்கே அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவே நேற்று தமிழக டிஜிபி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது சம்பந்தமாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும்,  குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக டிஜிபி டிஜிபி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார்.

Categories

Tech |