Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆதார்…. குடும்ப அட்டை….. ஆனந்த கண்ணீர் விட்ட திருநங்கைகள்….. திருவாரூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம்….!!

திருவாரூர் அருகே 3 திருநங்கைகளுக்கு ஆதார், குடும்ப அட்டை, 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை உள்ளிட்டவற்றை ஊராட்சி தலைவர் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளான செல்வக்கனி, நதியா, அவந்திகா உள்ளிட்ட 3 பேரும் எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான அட்டை ஆகிய மூன்றும் வேண்டுமென ஊராட்சி தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி,

நேற்றைய தினம்  ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மூன்று பேருக்கும் ஊராட்சி தலைவர் ஆதார் அட்டை, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இதை பெற்றுக்கொண்ட அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், திருநங்கைகளான எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பல இடங்களில் கேட்டு முறையிட்டோம் அப்போது அவர்கள் நீங்கள் ஒரு இடத்தில் நிலையாக இருக்க மாட்டீர்கள் ஊர் ஊராக சுற்றித் திரியும் உங்களுக்கு தரமுடியாது என்று எங்களுக்கு புறக்கணித்தார்கள். அந்த வகையில்,

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே இடத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். பின் ஆதார், குடும்ப அட்டை, 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை உள்ளிட்டவற்றை ஊராட்சி தலைவரிடம் முறையிட அவர் எங்களுக்கு இந்த மூன்று அட்டைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தனர்.

Categories

Tech |