தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்க இருப்பதாகவும், நடிகர் விஜய் 50 வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது தளபதி 68 திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 68 திரைப்படத்தை தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற ஹாட்ரிக் படங்களை இயக்கிய அட்லீ இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி தற்போது ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.