மேகன் மெர்சல் குறித்த பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில் அவர் ஒரு பொய்யர் என ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அரச குடும்பத்தினர் குறித்த தகவல்களை வெளியிடும் புத்தகங்களின் மேகன் குறித்த எதிர்மறையான தகவல்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. valentine low என்ற எழுத்தாளரின் courtiers the hidden power behind the crown என்ற புத்தகத்தில் மேகன் எப்படி தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களை துன்புறுத்தி அவர்களிடம் கத்தி, திட்டுவார்கள் என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திருமணத்திற்கு முன்னர் தன்னை காதலிப்பதை ஹரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டால் அவரைப் பிரிந்து விடுவதாக மேகன் மிரட்டியுள்ளார் என்பது போன்ற தகவல்கள் அந்த புத்தகத்தில் உள்ளது.
இதோடு மேகன் பொறாமை குணம் கொண்டவர், விளம்பர பிரியர், மகாராணி இறுதி சடங்கில் முதலை கண்ணீர் விட்டார் என்ற விமர்சனங்களை பலரும் முன் வைக்கின்றனர். இந்நிலையில் மேகனை தொடர்ந்து விமர்சித்து எதிர்ககும் ஒரு சாரார் Meghan Markleisaliar ( மேகன் மார்க்கல் ஒரு பொய்யர்) என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு டிரண்டாக்குகின்றனர். மேலும் இதில் பதிவிடும் பலரும் அரச குடும்ப ஆதரவாளர்கள் என்ற நிலையில் மேகனை மட்டும் விமர்சித்துள்ளனர்.