Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தையே கலங்க வைத்த பெண் தாதா….. கைது செய்த போலீஸ்…. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்……!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். சமூக அக்கரை கொண்ட இவர் திமுக வார்டு செயலாளராகவும் இருந்துள்ளார்.இதனிடையே தனது பகுதியில் லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தால் பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதை தெரிந்து கொண்ட அவர் லோகேஸ்வரியை தனியாக சந்தித்து கண்டித்துள்ளார்.

அதே சமயம் இளைஞர்களுக்கு மது விற்பதை தடுக்க லோகேஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் போலீசார் தற்காலிகமாக கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு ரோகேஸ்வரி இடம் கூறியுள்ளனர்.அதனால் லோகேஸ்வரிக்கு வருமானம் தடைபட்ட நிலையில் சதிசை தனது வீட்டிற்கு வரவழைத்த லோகேஸ்வரி பெரிய அறிவாளால் சதீஷின் தலையை துண்டித்து உடலை தெருவோரம் வீசிவிட்டு தலைமறைவாகினார்.

அதன் பிறகு ஐந்து பேர் கொண்ட தனிப்படை போலீசார் லோகேஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.அதாவது 45 வயதாகும் லோகேஸ்வரி பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார். விபச்சார தொழிலில் பல இளம் பெண்களின் வாழ்க்கையையும் அவர் நாசமாக்கியுள்ளார்.

அதன் பிறகு நாளடைவில் கள்ளச்சாராயம் தொழில் பிரதானமாக மாறியது.இன்னும் சொல்லப்போனால் காஞ்சிபுரம் தாதா என்றால் அது லோகேஸ்வரி தான். சொந்த கணவனையே கொலை செய்தவர், பொதுமக்களை அஞ்சி நடுங்குவார்கள். தனது தொழிலுக்கு யாராவது இடஞ்சல் செய்தால் அவர்களது வீக் பாயிண்ட்என்ன என்பதை அறிந்து கொண்டு பெண்களின் வலையில் சிக்க வைத்து காரியம் சாதித்து விடுவார் என விசாரணையில் பல தகவல்களும் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்

Categories

Tech |