Categories
சினிமா

பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா இறப்பு…. இரங்கல் தெரிவித்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளரும், வானொலி விளம்பரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவருமான எஸ்.வி ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவர் பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தா ஆவார். அத்துடன் இவர் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஆவணப் திரைப்படங்களையும் தயாரித்து இருக்கிறார். அந்த ஆவணப்படம் ஒன்றிற்கு நடிகர் ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

சென்னை ஆர்ஏ.புரத்தில் வசித்துவந்த எஸ்.வி. ரமணனனின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மக்கள்தொடர்பு கலையில் இவர் செய்த சாதனைக்காக டாக்டர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |