Categories
உலக செய்திகள்

உங்கள் இதயத் துடிப்பை நீங்கள் பார்க்க வேண்டுமா?…. புதிய வகை டீஷர்ட்டை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

இதயத்துடிப்பை கண்காணிக்கும் வகையில் புதிய  டீஷர்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில்  மிக குறைந்த விலையில் சென்சார் கருவிகளைக் கொண்டு  டி-ஷர்ட் , முக கவசம் ஆகியவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது. பொதுமக்கள் உடல் பயிற்சி, மற்றும் உறங்கும் போது இந்த டிஷர்ட்டுகளை அணிந்து கொண்டால் அவர்களது இதயத்துடிப்பு உள்ளிட்டவை கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலை குறைந்த சென்சார் கருவிகளை தொழிற்சாலையில் பயன்படுத்தும் எம்ராய்டரி இயந்திரங்கள் மூலம் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் முக கவசத்திலும் இந்த சென்சார் கருவிகளை பொருத்தி மூச்சு விடும் எண்ணிக்கையை அறியவும், விஷவாயு  கசிவை தடுக்க அம்மோனியா அளவை கண்காணிக்கவும் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆராய்ச்சிக்கு துவக்க புள்ளியாக இருந்தவர் இன்ஜினியரிங் துறை பிஎச்டி மாணவர் ஃபாஹத்   அல்ஷாபெளனா என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |