Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிக்கு 35கிமீ….. புதிய யூனியன் வேண்டும்….. பொதுமக்கள் மறியல்….!!

தூத்துக்குடி மாவட்டம் இளையராசனேந்தலை தலைமையகமாக கொண்டு புதிய யூனியன் அமைக்க வேண்டுமென 15 பஞ்சாயத்தை  சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்ற 2008 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து குருவிகுளம் யூனியனில் இருந்து இளையரசனேந்தல் பிரிவை சேர்ந்த 15 பஞ்சாயத்துக்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது. ஆனால் இதில் ஊரக உள்ளாட்சித் துறை தவிர்த்து மற்ற அனைத்தும் சேர்க்கப்பட்டதால் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கு 35 கிலோ மீட்டர் தூரம் இந்த 15 பஞ்சாயத்துகளை சேர்ந்த கிராம மக்கள் செல்ல வேண்டியது இருந்தது.

தற்போது குருவிகுளம் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இப்போதாவது இளையரசனேந்தல் பிரிவை சேர்ந்த 15 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனுடன் சேர்க்க வேண்டும் அல்லது இளையரசனேந்தல் தலைமையகமாகக் கொண்டு புதிய யூனியனின் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Categories

Tech |