நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில் மக்களுக்கு நகை கடன், பயிர் கடன் தள்ளுபடி ஆகியவை செய்யப்பட்டது. அப்படி இருக்கையில் தகுதியே இல்லாதவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும். எங்கள் ஆட்சி காலத்தில் அதிமுக கூட்டடுறவு துறை சிறப்பாக செயல்பட்டது என்பதற்கு மத்திய அரசு அளித்துள்ள விருதுகளை சாட்சியாக இருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் நான் வகித்த கூட்டுறவுத்துறையில் 15,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதனை அவர் நிரூபித்துவிட்டால் நிச்சயமாக அரசியலில் இருந்து விலகிவிடுகிறேன்” என சூளுரைத்துள்ளார்.