துப்பாக்கி சூட்டில் 3-க்கும் மேற்படோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நாடான ரஷியாவின் மத்திய பகுதியில் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 20 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.