வஸ்லின் போடுவதால் இவ்வளவு நன்மையா..? நம்பமுடியலையே..!! அட.. ஆமாங்க..! அழகிற்கு வாஸ்லின் பக்கவிளைவு இல்லாத ஒன்று.. இது விளம்பரம் இல்லை…
உதடு கருமை:
உதடு கருமையாக இருப்பவர்களும், உதடு வெடிப்பு குறைவதற்கும், 5 நிமிடம் மசாஜ் பண்ணினா உதட்டின் நிறம் சீக்கிரமே மாறிடும். உதட்டில் வெடிப்பு அதிகமாக இருந்தாலும், ரொம்பவே வறண்டு போய் இருந்தாலும், தினமும் வஸ்லின் உதட்டில் போட்டு வந்தால், உதட்டின் நிறம் சீக்கிரமே பிங்க் கலரில் மாறிவிடும். அதே மாதிரி உதட்டில் வெடிப்பு இருந்தாலும் சரி பண்ணும்.
புருவம் மற்றும் கண் முடி அழகா வளர:
வாஸ்லின் போடுவதால் புருவ முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். அதாவது தினமும் நைட்டு தூங்கப் போறதுக்கு முன்னாடி இரண்டு புருவம் மற்றும் கண் இமைகளில் உள்ள முடிகளில், கொஞ்சமாக எடுத்து அப்ளை பண்ணிட்டு தூங்கிட்டு அடுத்த நாள் காலையில எந்திரிச்சு குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.
கூடிய சீக்கிரத்திலேயே புருவ முடி வளர்ச்சி அதிகரிக்கும்.என் என்றால் முடிவளர்ச்சி பகல் நேரத்தை விட, இரவு நேரத்தில் தான் அதிகமாக வளர்ச்சி அடையும். அதனால் நீங்க புருவவங்களில் எண்ணெய் அப்ளை பண்றதுக்கு பதிலாக இந்த வாஸ்லின் அப்ளை பன்னிங்கன்னா ரொம்ப ஈசியா இருக்கும்.
பாத வெடிப்பு:
பாதவெடிப்பு நிறைய பேருக்கு அதிகமாகவே இருக்கும். இதனால் ரொம்பவே நடக்க முடியாமல் காலில் அதிக வலி ஏற்படும். அப்படி பிரச்சனை உள்ளவர்கள் வாஸ்லின் தொடர்ந்து பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி வந்தால், சீக்கிரமே பாத வெடிப்பு குணமாகும்.
குறிப்பாக நீங்கள் பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதை நீங்க அப்ளை பண்ணலாம். ஏன்னா பகல் நேரத்தில் நாம் நடப்போம். அதனால் வெடிப்பு அதிகரிக்க கூடும். இரவு நேரத்தில் அப்ளை பண்ணிட்டு தூங்கினால் சீக்கிரமே பாத வெடிப்பு சரியாகும்.
சரும வறட்சி:
குளிர்காலத்தில் சருமம் ரொம்பவே வறட்சியாக இருக்கும். அப்படி உள்ளவங்களுக்கு சருமம் ரொம்ப வறண்டு இருக்கும். அப்படி பிரச்சனை உள்ளவர்கள் மாய்ஸ்ரைசிங் க்ரீம் யூஸ் பண்றதுக்கு பதிலாக, வஸ்லின் வறண்ட சருமத்தில் அப்ளை பண்ணிட்டு மசாஜ் பண்ணினாலே போதும். உங்களுடைய சருமம் வறட்சி எல்லாமே நீங்கி விடும்.
காயங்கள் மறைய:
சென்சிட்டிவ் ஸ்கின் இருக்கிறவங்களுக்கு, அவங்களோட நகம் பட்டால் கூட சின்ன கீறல்கள், அவங்க முகத்துல ஏற்படும். அந்த பிரச்சினை உள்ளவர்கள் வாஸ்லின் கொஞ்சம் எடுத்து அப்ளை பண்ணினாலே போதும் சீக்கிரம் இந்த காயம் எல்லாம் மாறிவிடும்.
நகம் வளர:
ஒரு சிலருக்கு எவ்வளவுதான் நகம் நல்லா வளக்கணும்னு ஆசைப்பட்டாலும், அது சில சமயத்துல உடைந்து, உடைந்து போய்விடும். இது வைட்டமின் குறைபாடு காரணம் ஆகும். நகங்களில் இரவில் வாஸ்லின் அப்ளை பண்ணுவதன் மூலம், இதை சரி பண்ணிவிடலாம்.
தொடர்ந்து செய்யும் பொழுது நகங்களில் ஈரப்பதம் அதிகரித்து உங்களோட நகம் உடையாமல் வளரும்.