செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், எடப்பாடியை எதார்த்தமாக அம்மா முதலமைச்சர் சீட்டில் உட்கார வைத்திருந்தால், அம்மாவையே வெளியே வரும் போது ”நீ யாரென்று” கேட்டிருப்பார், அம்மாவிற்கே துரோகம் செய்து, அம்மாவையே காலி செய்து இருப்பார். அவ்வளவு பயங்கரமான கிரிமினல் மூளை.
ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறீர்களே நீங்கள் என்ன ஒரு கட்சித் தலைவரா ? ஓபிஎஸ்யை தொண்டர்கள் விரும்புகிறார்கள், அவர்களை ( இபிஎஸ் ) விரும்புவர்களை குண்டர்கள் விரும்புகிறார்கள், அதனால் நாங்கள் தொண்டரோடு இருக்கிறோம். சினிமாவில் நடிப்பு நடிப்பவர்கள் கூட அந்த மாதிரி இருக்க மாட்டார்கள்.
வடிவேலுவை விட கெட்டிக்காரன் நடிகர், அப்படியே குனிந்து, கண்ணில் தண்ணி விடுகிறார், அப்படியே தவழ்ந்து போகிறார்,காலை தொட்டு கும்பிடுகிறார், காலை நக்கி அப்படியே எழுந்துருக்கிறார். அதை பார்த்து என்ன செய்தார்கள் சின்னம்மா, இவ்வளவு நல்ல மனுசராக இருக்கிறார் என்று முதலமைச்சராக்கி விட்டார்கள், அப்புறம் தான் அவர்களுக்கு தெரிந்தது பச்சோந்தி என்றால் பத்து கலர் தான் வரும், எடப்பாடி பழனிச்சாமி 100 கலர் பச்சோந்தி. அதாவது பாம்பு கடித்தால் தான் விஷம், எடப்பாடி பழனிச்சாமி பார்த்தாலே விஷம் என விமர்சித்தார்.