தீப்தி ஷர்மா சார்லி டீனை நான்-ஸ்டிரைக்கர் முடிவில் ரன் அவுட் செய்ததை அடுத்து, கிரிக்கெட் சட்டங்களின் பாதுகாவலர்களான மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி கடந்த 24ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.. இதனால் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது..
இப்போட்டியில் இங்கிலாந்து சேஸ் செய்யும்போது 35.2 ஓவரில் 118/9 விக்கெட் இழந்து தவித்தபோது சார்லி டீனுடன், டேவிஸ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது 44ஆவது ஓவரை தீப்தி சர்மா வீசினார்.. அந்த ஓவரின் 3ஆவது பந்தை தீப்தி வீசுவதற்கு முன்பாகவே நான் -ஸ்ட்ரைக்கில் இருந்த சார்லி டீன் கோட்டை விட்டு வெளியேறி ரன் எடுக்கமுயன்றார். அப்போது மன்கட் முறையில் தீப்தி ரன் அவுட் செய்து அம்பெயரிடம் அவுட் கேட்டார்.. இதையடுத்து 3ஆவது நடுவரிடம் கேட்கப்பட, டிவி ரீபிளேவில் அவுட் என வந்தது.. இதனால் 47 ரன்கள் எடுத்திருந்த டீன் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார்.. இந்தியாவும் வென்றது.
இதனை தாங்கிக்கொள்ள முடியாத டீன் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.. அவரை சக வீரரான டேவிஸ் தேற்றுகிறார்.. இந்த அவுட்டால் பெவிலியனில் இருந்த இங்கிலாந்து வீரர்களும் சற்று அதிர்ச்சியடைந்தனர்.. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.. இதற்கு பலரும் ஐசிசி விதிகளில் உள்ளதை செய்ததாக பாராட்டினாலும், சிலர் ஒருமுறை அவரை எச்சரித்திருக்கலாம் இப்படி அவுட் செய்திருக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்..
இந்நிலையில் கிரிக்கெட் சட்டங்களின் பாதுகாவலர்களான, விதிகளை வகுக்கும் மேர்லிபோன் (MCC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சட்டம் தெளிவாக உள்ளது, ஏனெனில் அனைத்து நடுவர்களும் விளையாட்டின் அனைத்து நிலைகளிலும் மற்றும் விளையாட்டின் எல்லா தருணங்களிலும் எளிதாக விளக்க முடியும். நான்-ஸ்ட்ரைக்கரில் சார்லி டீனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது சட்டம் விதி எண் 38 ன் படி செல்லுபடியாகும்.
பந்து வீச்சாளர் கையை விட்டுப் பந்து செல்லும் வரை, ஸ்ட்ரைக்கர் அல்லாதவர்கள் மைதானத்தின் கோட்டிற்குள் இருக்க வேண்டும். பின்னர் நேற்று (24ஆம் தேதி மன்கட்) பார்த்தது போன்ற டிஸ்மிஸ்கள் நடக்காது” பரபரப்பான போட்டிக்கு அசாதாரணமான முடிவாக இருந்தபோதிலும், அது சரியாக நடத்தப்பட்டது, மேலும் எதையும் கருதக்கூடாது”என விளக்கியுள்ளது.
MCC comment on the Run out at the non-striker's end at @HomeOfCricket yesterday ⤵️#CricketTwitter | #ENGvIND
— Marylebone Cricket Club (@MCCOfficial) September 25, 2022