மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் வைரஸ், கும்பளங்கி நைட்ஸ், உஸ்தாத் ஓட்டல், 22 பீமேல் கேட்டயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் சட்டம்பி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு நடிகர் ஸ்ரீநாத் பாசி ஒரு பிரபலமான மலையாள யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பெண் தொகுப்பாளினி ஒருவரின் கேள்வியால் ஸ்ரீநாத் எரிச்சல் அடைந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஸ்ரீநாத் கேமராவை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதன்பிறகு பேட்டியெடுத்த தொகுப்பாளினியையும், அங்கிருந்தவர்களையும் ஆபாசமாக திட்டி விட்டு, அங்கிருந்து கோபத்துடன் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்று நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் தான் உண்மையில் பாதிக்கப்பட்டவன் என்று ஸ்ரீநாத் கூறியுள்ளார்.