சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி, செவ்வந்தி ஆகிய தொடர்களில் நடித்த நடிகை திவ்யா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
நடிகை திவ்யா சீரியல் நடிகர் அஜ்மத்தை திருமணம் செய்து கொண்டு தான் தற்போது கர்ப்பமாக இருப்பதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் பல்லக்கி என்னும் கன்னட படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். இதனை அடுத்து தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். பின் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் நடித்திருந்த திவ்யா தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இதனையடுத்து தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இவர் 2017ம் ஆண்டே அவருடன் சேர்ந்து நடித்த அர்னவ் என்பவரை ரகசியம் திருமணம் செய்ததாக செய்தி வெளியான நிலையில், இருவரும் அதை மறுத்தே வந்தனர். இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.