உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது. இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் பயனர்கள் தாங்களே கார்ட்டூன் அவதாரை உருவாக்கி பயன்படுத்தலாம் என்றும், அதற்கென பிரத்யேக அம்சம் ஒன்றை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பயனர்கள் சேட் செய்யும்போது ஸ்டிக்கராகவும், வீடியோ கால் பேசும்போது மாஸ்க் ஆகவும் அவதாரை பயன்படுத்தலாம். இந்த அம்சம் விரைவில் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.