பொதுவாக நாம் ரயில் பயணத்திற்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். அதற்காக IRCTC போர்டல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ரயில்வேயில் ஐஆர்சிடிசி போர்ட்டலில் இருந்து ரயில் டிக்கெட் விரைவாக முன்பதிவு செய்யப்பட்டு பயணிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாதுகாப்பு படை பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்த விசாரணையில் போலீசாருக்கு சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி வந்த இரண்டு கடைகள் சிக்கி உள்ளன.
இதன் பிறகு நடத்தப்பட தீவிர விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் அந்த சட்ட விரோதமான மென்பொருளை உருவாக்கி விற்பனை செய்துள்ளது தெரிய வந்ததுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அந்த சென்று அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். சைலேஷ் யாதவ் (27) சட்டவிரோத மென்பொருளை உருவாக்கி நாடு முழுவதும் அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த மென்பொருள் மூலம் கடந்த 18 மாதங்களில் சுமார் ரூ.98 லட்சம் அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 7000 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார். அதன்படி, இதுவரை 1,25,460 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார். இந்த டிக்கெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.56.45 கோடியாகும்.