Categories
சினிமா தமிழ் சினிமா

நடக்க முடியாத நிலையில் விஜய் டிவி பிரபலம்….. இவருக்கா இந்த நிலைமை….!!!!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான திவ்யதர்ஷினி (டிடி). சுந்தர் சி இயக்கியுள்ள `காஃபி வித் காதல்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், தொகுப்பாளனி டிடி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டிடி வீல் சேரில் அமர்ந்தபடி பங்கேற்றார். அவரது காலில் பிரச்சனை உள்ளதால், வீல்சேரில் அவரை அமரவைத்து ஒருவர் தள்ளிக்கொண்டு வந்தார். இவரின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் இது குறித்த போட்டோ இணையத்தில் வெளியான நிலையில் அவருடைய ரசிகர்கள் டிடிக்கு என்ன ஆச்சு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |