Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை…. “சென்னையிலிருந்து புறநகரங்களுக்கான விமான டிக்கெட் அதிகரிப்பு”…. பயணிகள் அதிர்ச்சி…!!!!!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் பயணிகள் அதிர்ச்சடைந்துள்ளார்கள்.

சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தொடர்ந்து திங்களைத் தவிர்த்து 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. மறுநாள் 5-ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. தொடர் விடுமுறை வருவதால் வரும் 30-ம் தேதி முதல் சென்னையில் வசிப்பவர்கள் அவரவர்களின் சொந்த ஊர் நோக்கி படையெடுப்பார்கள். இதனால் ஏற்கனவே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. இதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் விமான பயணங்களை மேற்கொள்கின்றார்கள்.

ஆனால் தொடர் விடுமுறை என்பதால் உள்நாட்டு விமான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றது. இது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பயணிகள் கூட்டத்தால் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக கூறுவது தவறு, குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட இருக்கைகள் மட்டும் ஒதுக்கிவிட்டு மற்ற இருக்கைக்கு இரண்டு அல்லது மூன்று விதமான கட்டணங்களில் நிர்ணயித்திருக்கிறோம். முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டணமும் அதன் பின் வருபவர்களுக்கு படிப்படியாக கட்டணம் அதிகரிக்கும். இதுதான் நடைமுறையில் இருப்பதாக கூறியுள்ளார்கள்.

Categories

Tech |