Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நான் மட்டும் தான் அப்படி சொல்லி இருக்கேன் – சிக்கிய அடுத்த எம்.பி … வைரலாகும் வீடியோவால் DMK ஷாக் …!!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்,  திமுக  மாநிலங்களவை உறுப்பினருமாக கே ஆர் என் ராஜேஷ்குமார் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் திமுகவினரிடையே மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து திமுக எம்.பி முன்னிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் திமுகவை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே மணல் அள்ளி வருவதாகவும் கூறப்படுகிறது. இவரை மணல் அள்ளக்கூடாது என சிலர் தடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் திமுக எம்பி பேசுகின்ற காட்சி என்பது தற்போது சமூகவளிதாக வைரல் ஆகி வருகின்றது.

அந்த காணொளியில்,  தான் ஒருவர் மட்டும்தான் திமுக கட்சிக்காரர்களை மணல் அள்ள அனுமதித்துள்ளதாகவும் வேறு எந்த மாவட்ட செயலாளரும் மணல் ஏற்பதில்லை எனவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த காணொளியை அதிமுகவினர் மட்டுமல்லாது பாஜகவினரும் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். ஏற்கனவே ஆ.ராசா எம்.பி சர்சை சென்று கொண்டு இருக்கும் நிலையில் இந்த வீடியோ திமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |