Categories
தேசிய செய்திகள்

“சீன எல்லையில் மோதல் போக்கு” பிரச்சனைகளை சந்திக்க தயார்….. பெண் விமானி அதிரடி பேட்டி….!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் நகரின் கிழக்குப் பிரிவில் சீன எல்லையை ஒட்டி இந்திய விமானப்படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு சுகோய்‌ ரக சூ-30 போர் விமானத்தில் எலக்ட்ரானிக் போர் சாதனங்கள் மற்றும் புதுவிதமான ஆயுதங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய விமான படையின் ஆயுத தாக்கல் பிரிவில் லெப்டினன்ட் தேஜஸ்வி எனும் ஒரே ஒரு பெண் விமானி மட்டும் பணியாற்றுகிறார். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இந்திய விமான படையின் கீழ் பணி மற்றும் ஒவ்வொரு அதிகாரியும் எப்போது பிரச்சனை வந்தாலும் அதற்கு தயாராக இருக்கும் விதத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கிழக்கு பிரிவின் பல்வேறு விமான தளங்களில் இருந்து வந்துள்ள விமானிகள் எந்தவிதமான பிரச்சனையையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.

விமானியின் பின்னால் இருந்தபடியே சென்சார்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் பணியில் சிறப்பு அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றார். அதன் பிறகு செய்தியாளர் ஒருவர் சீனாவுடன் எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கை பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு தேஜஸ்வி கடினமான சூழ்நிலைகளில் எங்களுடைய மனம் மாறுபடாது. அதுபோன்ற சூழ்நிலைகளில் பணியாற்றுவதற்கு ஏற்ப தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த பயிற்சிகள் மூலம் எங்களால் எந்தவிதமான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட முடியும். அதோடு எதிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தைரியமும் வரும் என்று கூறினார்.

Categories

Tech |