தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன்பின் தான் இயக்கிய பலர் சூப்பர் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை தி.நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அமைந்த கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாரதிராஜாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாரதிராஜாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை முடிந்த நிலையில் பாரதிராஜா வீட்டிற்கு திரும்பியுள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா அம்மகிழ்ச்சியான செய்தியை தொலைபேசியில் என்னுடன் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் நலம் விசாரிக்க சென்ற போது, ஆஸ்பத்திரியில் உங்களை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை. சீக்கிரம் வீடு திரும்புங்கள். நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன். Okay Later for sure, bey என்று ஆங்கிலத்தில் சொல்லி வழி அனுப்பினார். சொன்ன வாக்கை காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்த பரமக்குடியானின் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். (1/3)
— Kamal Haasan (@ikamalhaasan) September 26, 2022