மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவரான ராமு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மீன்பிடி தொழில் செய்து வந்த ராமு கடந்த ஒரு வருடமாக காக்கா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் ராமு திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூரங்குடி காவல்துறையினர் ராமுவின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.