கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாணவியின் தாயார் செல்வி டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த தொடர்பான மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் செல்வி தரப்பில் வழக்கறிஞர் வெங்கடரமணி ஆஜரானார். அவர் நீதிபதிகளிடம் ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறவில்லை. தசராவுக்கு பிறகு கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் தர வேண்டும் என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கொடுத்து உத்தரவிட்டனர்.