Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டெலிவரி செய்த மாணவன்….. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்….. சென்னையில் பரபரப்பு….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாட்களில் பாலாஜி ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு டெலிவரி செய்துவிட்டு பாலாஜி மொபட்டில் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் முகலிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த சிமெண்ட் கலவை எந்திர லாரி பாலாஜியின் வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த பாலாஜியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் போலீசார் அங்கு விரைந்து சென்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து மாணவனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |