Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சி அருகே கோர விபத்து…. மகன் படுகாயம்….. தாய் உடல் நசுங்கி பலி….!!

காஞ்சிபுரம் அருகே லாரி மோதிய விபத்தில் தாய் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் வசித்து  வந்தவர் தரணி பாபு. இவர் நேற்று செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு தனது தாயை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், அவர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில்

தாயும், மகனும் தூக்கி வீசப்பட்டத்தில்  தரணி பாபு சாலையோரத்தில் விழ, தாய் சாலையில்   விழுந்து பேருந்தின் டயர் ஏறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |