Categories
உலக செய்திகள்

வெறும் டிபன் பாக்ஸ்…. சாப்பிடுவது போன்று பாசாங்கு செய்த சிறுவனின் பரிதாப நிலை….!!!

லண்டனில் பள்ளிக்கு வந்த சிறுவன்  தன்னிடம் மதிய உணவு சாப்பிட எதுவும் இல்லாததால் வெறும் டிபன் பாக்ஸை வைத்துக் கொண்டு சாப்பிடுவது போல் நடித்த விடயம் குறித்த அதிர வைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 

லண்டனில்  சமீபமாக   தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ள  ஆய்வில் விலைவாசி உயர்வு காரணமாக குடும்பங்கள் திணற வரும்  நிலைையில் பிள்ளைகள் உணவில்லாமல் பள்ளிக்கு செல்வதும், நண்பர்களுக்கு அது தெரியக்கூடாது என்பதற்காக வெறும் டிபன் பாக்ஸை வைத்துக்கொண்டு சாப்பிடுவது போல் நடிப்பது தெரிய வந்துள்ளது. லண்டனிலுள்ள lewissham  என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் பயிலும் ஒரு பிள்ளை மதியம் உணவும் இல்லாமல் தான் இலவச உணவு உண்ணவும் தகுதி பெறாததால் வெறும் டிபன் பாக்ஸை வைத்துக்கொண்டு சாப்பிடுவது போல் நடித்திருக்கின்றது.

இதுபோன்ற இங்கிலாந்திலுள்ள பல பள்ளிகளில் இந்த துயர நிலை இருப்பது தொண்டு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. சாப்பிட எதுவும் கொண்டு வராததால் மதிய உணவு நேரத்தில் விளையாட்டு மைதானத்தில் சென்று ஒளிந்து கொண்ட பிள்ளைகளும் இருக்கின்றார்கள். சில பள்ளிகளில் மதிய உணவு உண்ட பிறகு வேறு உணவு இல்லாமல் மீண்டும் அடுத்த நாள் உணவை மட்டுமே நம்பியிருக்கும் பள்ளிகளும் இருக்கிறார்களாம். ஆகவே சில பள்ளிகளில் இலவச உணவு பெற தகுதி பெறாத பிள்ளைகளுக்கும் உணவளிக்க முயன்று வரும் ஆசிரியர்கள் அரசின் உதவியை கோரியுள்ளனர். இங்கிலாந்தில் இரண்டு வயது வரையிலான பிள்ளைகள் மற்றும் தங்கள் பெற்றோரின் ஆண்டு வருவாய் 7400 பவுண்டுகளுக்கு குறைவாக உள்ள மாணவ மாணவியருக்கு மட்டுமே இலவச உணவு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |