கனடா நாட்டில் புயல் பாதிப்பால் மின்சாரம் தடைப்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
கனடா நாட்டில் கிழக்கு பகுதியை பியோனா என்ற பயங்கர புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த புயல் பாதிப்பால் பல வீடுகளில் மின்சாரம் துண்டானது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மின்சார தேவைக்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “அட்லாண்டிக் கனடா மற்றும் கிழக்கு கியூபிக் முழுவதும் பல பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.
Many people across Atlantic Canada and Eastern Quebec are without power, and these @HydroOttawa crews are heading out East to help them. To all of the crews who are doing this work, to all of the first responders, and to everyone who has stepped up: Thank you. Please stay safe. pic.twitter.com/v0Q1OCQEYM
— Justin Trudeau (@JustinTrudeau) September 26, 2022
இந்த HydroOttawa குழுக்கள் அவர்களுக்கு உதவ கிழக்கு நோக்கி செல்கின்றன. இந்த பணியை செய்யும் அனைத்து குழுவினருக்கும், முதலில் பதிலளித்த அனைவருக்கும், முடுக்கிவிட்ட அனைவருக்கும் நன்றி என்றும் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் குழுவினருடன் அவர் உரையாடும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.