பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கத்ரினா மதுரையில் பள்ளி குழந்தைகள் சிலருடன் அரபிக் குத்துப் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக இந்தியாவின் நிவாரண திட்டத்தின் ஒரு பகுதியாக 2015 ஆம் ஆண்டு மதுரையில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளியை கத்ரீனா கைபின் தாயார் சுசானே நீண்ட காலமாக அவரின் அறக்கட்டளை மூலமாக நடத்தி வருகிறார். சுசானே இந்த பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் தான் கத்ரினா கைப் சமீபத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் நடனமாடி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மிகவும் எளிமையான வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த கத்ரினா கைப் நடிகர் விஜயின் பீஸ்ட் பட பாடலான “அரபிக் குத்து” பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடும் காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் கத்ரினா இந்த நிகழ்ச்சியில் மிக எளிமையாக நடந்து கொண்ட விதத்தை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
#katrinakaif dance in #Arabickuthu with kids 😍💞
Mountain View School pic.twitter.com/ogTPMp3rNd— myqueenkay (@myqueenkay1) September 25, 2022