தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்30ம் தேதி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற 30ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்க பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகின்றது. மேலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதன்மை கருத்தாளர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பங்கேற்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.