Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ஃப்ரீ ஃபயர் விளையாட்டு: நீதிபதிகள் வேதனை …!!

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது.

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் இரத்தம் தெறித்து போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறை தூண்டுகின்றது. கொரோனா முடக்கம் இளைய தலைமுறையினருக்கு சோதனையான காலகட்டமாக அமைந்து விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது இயலாத காரியமாக இயலாத காரியமாகவே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் பெற்றோர், குழந்தைகள் என அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவர்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷா பானு,  ஆனந்த வெங்கடேஷ் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

Categories

Tech |