Categories
மாநில செய்திகள்

மத்தியில் “ஸ்டாலின் மாடல் ஆட்சி”….. முதல்வர் சொன்ன அசத்தல் பதில்…. மகிழ்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்….!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தெற்கிலிருந்து இந்தியா பெற்ற பாடங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று அண்ணா ஒரு காலம் கூறினார். ஆனால் அந்த காலம் தற்போது மாறிவிட்டது. பல்வேறு ஆண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற்று தருவதுதான் சமூக நீதியின் நோக்கம்.

சத்துணவு திட்டம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு, இலவச பேருந்து வசதி, சொத்துரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை போன்ற பல திட்டங்கள் தமிழகத்தில் இருந்து தான் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் வளர்ச்சியை பொருத்தவரை பல்வேறு குறியீடுகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.  அந்த வகையில் பட்டினி இல்லா சாவு, பணவீக்கம் குறைவு, தலை சிறந்த உயர் கல்வி மற்றும் தனிநபர் வருமானம் போன்றவைகளில் சிறந்து விளங்குகிறது.

ஏற்றுமதியை கணக்கிட்டு செயல்படுவது வேறு மாடல். ஆனால் மக்கள் ஏற்றத்தை கணக்கிட்டு இயங்குவது தான் திராவிட மாடல். எல்லோரிடமும் திராவிட மாடல் சிந்தனை மேலோங்க வேண்டும் என்றார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினிடம் மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வருமா என்று கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு முதல்வர் வரும் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

மேலும் குஜராத் மாடல், டெல்லி மாடல், திராவிட மாடல் என பல்வேறு ஆட்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஸ்டாலின் மாடல் ஆட்சியும் மத்தியில் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் திமுக உடன்பிறப்புகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். வருகிற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக யார் ஆட்சி அமைத்தாலும் திமுகவுக்கு சாதகமாக தான் அமையும் என்பதை தான் முதல்வர் அப்படி கூறியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |