Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் அறிகுறி: மதுரை இராஜாஜி மருத்துவமனையில் இருவர் அனுமதி!

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு 2 பேர்  சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் சீனாவிலிருந்து  தமிழ்நாடு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும்  கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த காரணத்தால்  நேற்று இரவு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 2 பேரும் கொரோனா வைரஸ் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சிறப்புச் சிகிச்சைப் பிரிவு உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் நோயாளியின் உறவினர்கள் செல்ல மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மருத்துவர்கள் மற்றும்  செவிலியர்களுக்கு கொரானாவின் தொற்று ஏற்படாமல் இருக்க பிரத்யேக ஆடைகள்,  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |