Categories
மாநில செய்திகள்

“என்ஜினியரிங் மாணவர்கள் கவனத்திற்கு”…. நாளை வெளியாகிறது தற்காலிக ஒதுக்கீடு…. அதிகாரிகள் தகவல்….!!!!!

என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு நாளை தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 431 என்ஜினியரிங் கல்லூரிகள்  செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் என்ஜினியரிங் இளநிலை  படிப்புகளுக்கு 148, 811 இடங்கள் உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. அதில் முதல் கட்ட கலந்தாய்வில் 668 இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு ஓதுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த மாதம் 10-ஆம்  தேதி பொது பிரிவு கலந்தாய்வில் முதல் சுற்று தொடங்கி 25-ஆம் தேதி காலை  நிறைவு பெற்றது. இதில் 10 ஆயிரத்து 340 மாணவர்கள் தங்களது இடங்களை உறுதி செய்தனர்.

இதனையடுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. அதில் மாணவர்கள் கல்லூரிகளை தகுதியின் அடிப்படையில் இணைய வழியில் தேர்வு செய்து வருகின்றனர். இந்த கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப பதிவை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்காலிக ஒதுக்கீடு வரும் 28-ஆம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில்  மாணவர்கள் 29-ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பின்னரே மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கு  கடிதம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |