Categories
மாநில செய்திகள்

BREAKING : சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈசாவுக்கு விலக்கு….. ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது. 

ஈசா அறக்கட்டளை சார்பாக விதி மீறி கட்டிடங்களை கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கோரி ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்க்கு தடை விதிக்க கோரி அறக்கட்டளை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஈசா யோகா பயிற்சி மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கூடாது என ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து ஈசா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும் ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்..

Categories

Tech |