பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.
சனி, ஞாயிறு இல்லாமல் திங்கள், வெள்ளிக்கிழமை விடுத்து செவ்வாய்க்கிழம, புதன்கிழமை வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களாக மொத்தம் ஏழு நாட்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித் தலைமையிலான அமர்வில் விரிவான விசாரணையாக நடத்தப்பட்டது.
திமுகவின் ஆர் எஸ் பாரதி, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா அதேபோல தெலுங்கானா, மகாராஷ்டிரா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் 10% இட ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள். இதற்காக திருத்தப்பட்ட சட்டப்பிரிவு 103 ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
குறிப்பாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அத்தியாவசிய காரணங்களுக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறி நியாயப்படுத்தி இருந்தார். அதேபோல திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மத்திய அரசின் வாதம் என்பது சரியானதாக இல்லை.
இட ஒதுக்கீடு என்பது வறுமையின் மீட்பதற்காக இல்லாமல், சமுதாயத்தில் ஜாதி உள்ளிட்ட விஷயங்களால் நலிவடைந்தவர்களை கை தூக்கி விடக் கூடிய விஷயமாகத்தான் இருக்கின்றது. பல முக்கிய வழக்கின் தீர்ப்புகளும் அதைத்தான் வலியுறுத்துகிறது என வாதிட்டார். அணைத்து தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்கள்.