ஊடகங்களில் பல்வேறு வகையான வித்தியாச வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இதைகண்டு நெட்டிசன்கள் தங்களது மன அழுத்தங்களை மறந்து சிரிக்கின்றனர். அந்த வகையில் இப்போது வெளிவந்துள்ள காணொளி அனைத்தையும் விட வித்தியாசமானது ஆகும். இந்த வீடியோவானது காதல்கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. வீடியோவில், சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பெண் யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு அருகில் ஒரு பைக்கும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிரேமில் மற்றொரு ஆண் வருக்கிறான். அந்த ஆண் நபர் அப்பெண்ணை கவர முயல்வது தெரிந்தது. அத்துடன் அந்நபர் நிறுத்தப்பட்டிருந்த பைக் அருகில் சென்று ஓனர் என்பதுபோல் காட்டினார்.
அதேநேரம் அப்பெண் அவனது செய்கைகளைக் கண்டு சற்று அசௌகரியமாக நிற்கிறாள். இதனிடையில் அந்த ஆண் அவளுடன் பேச முயற்சிப்பது போல் தெரிகிறது. அப்போது உண்மையில் அந்நபர் அமர்ந்திருந்த பைக்கின் உரிமையாளர் உடனடியாக அங்கு வந்தார். பின் உரிமையாளர் உடனடியாக அந்த நபரை அங்கிருந்து தள்ளி விட்டார். இதில் வேடிக்கை என்னவெனில், அப்பெண்ணும் பைக் உரிமையாளருக்கு அறிமுகமானவர் என்பதும், இருவரும் பைக்கில் அமர்ந்து அங்கிருந்து கிளம்பியதும்தான். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ghantaa எனும் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.