கடலூரில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டுவதாக கூறி பொதுமக்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த கீரனூரில் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் சாதிய பாகுபாடு எங்களிடம் காட்டுவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் புகார் அளித்தனர்.
இதையடுத்து நேற்று காலை மாணவ மாணவிகள் பள்ளி முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தாசில்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் பெற்றோர்கள் தாசில்தாரிடம் இவ்வாறு தெரிவித்தனர்.
பள்ளி ஆசிரியர்களுக்கு இடையே பாகுபாடு இருப்பதாகவும் அதனை மாணவர்களிடம் காட்டுவதால் அவர்களது படிப்பு பாதிக்கப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மொபைல் மூலம் பிரச்சனையை தாசில்தார் தெரிவித்து விட்டு பின் உரிய நடவடிக்கை கப்படும் என்று உத்தரவு அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.