Categories
உலக செய்திகள்

சவாலான நிலைக்கு தள்ளப்பட்டால்… அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்… எச்சரிக்கும் முன்னாள் ரஷ்ய அதிபர்…!!!

ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர், சவாலான நிலைக்கு தள்ளப்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே உக்ரைன் நாட்டை எதிர்த்து அணு ஆயுதங்களை பயன்படுத்தி விடுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், எங்களை கடும் சவால்களை எதிர்கொள்ள வைக்கும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தற்காக்க வேண்டிய உரிமை இருக்கிறது. இது மலுப்பும் விஷயம் கிடையாது என்று உறுதி அளிக்கிறேன் என கூறி இருக்கிறார்.

Categories

Tech |