Categories
சினிமா

“சிம்புவை 16 வருடமாய் என் தங்கை காதலிக்கிறாள்”….. பிரபல சீரியல் நடிகை தகவல்…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு.இவர் என் நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே 40 வயது நெருங்கிக் கொண்டிருக்கும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சிம்புவை 16 வருடமாக என் தங்கை காதலித்து வருகிறாள் என பிரபல சீரியல் நடிகை வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சாய் காயத்ரி. இவர் சிம்புவின் காதல் குறித்து பேட்டி ஒன்றின் கூறியுள்ளார்.

அதில் அவரின் தங்கை சிம்புவை காதலிப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில் படிக்கும் போது சிம்பு மீது காதல் வயப்பட்டு இருந்ததாகவும் சன் மியூசிக் சேனலை பார்த்துக் கொண்டிருக்கும்போது சிம்புவின் பாட்டு வரும்போது எல்லாம் அவர் மீது தங்கைக்கு கிரஷ் ஏற்பட்டதாகவும், 16 வருடங்களாக சிம்பு காதலித்துவருவதாகவும் சிம்புவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் அவரிடம் தனது காதலை தங்கை கூறுவார் எனவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Categories

Tech |