ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சொப்பன சுந்தரி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடத்து வருகின்றார். இந்த நிலையில் எஸ்.ஜி சார்லஸ் இயக்கும் சொப்பன சுந்தரி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த படத்தில் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றார்கள். இத்திரைப்படத்தை ஹம்ஷினி என்டர்டைன்மென்ட் மற்றும் கியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது முழு வீச்சில் நடைபெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் விரைவில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.