Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1…. “சோழ மன்னர்களை கொன்று ரத்தத்தை கொற்றவைக்கு படைப்போம்” பாண்டிய நாட்டின் சபதம்…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தற்போது புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் சோழ மன்னர் சுந்தர சோழன், இளவரசர்கள் ஆதித்ய கரிகாலன் மற்றும் அருண் மொழி வர்மனை கொள்வோம் என பாண்டிய நாட்டினர் சபதம் எடுக்கின்றனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |