Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது..! 1400 பக்கம் இருக்கு… பார்த்ததும் பதறிய உதயநிதி ..!! மேடையில் நெகிழ்ச்சி பேச்சு ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எழிலரசன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்,  இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்தலாம் என்று அவரும், திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முடிவு செய்து,  இங்கே அறிவாலயத்தில் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். என்னை கேட்டிருந்தால்…

நான் அன்பகத்தில் நடத்த வேண்டும் என்று சொல்லி இருப்பேன், அன்பகம் என முடிவு செய்வதில் சின்ன தனிப்பட்ட விஷயம் இருக்கின்றது. ஏனென்றால் இளைஞரணிக்கு வந்து இருக்கும் வருமானம். ஆனால் இங்கே எல்லோரும் புத்தகத்திற்கு நல்ல பிரமோஷன் செய்து விட்டார்கள், நக்கீரன் கோபால் அவர்கள் அவருடைய புத்தகத்திற்கும் சேர்த்து இங்கே பிரமோஷன் செய்து கொண்டார். கலைஞரும் இலக்கியமும் என்ற புத்தகத்திற்கும் சேர்த்து இங்கே பேசி இருக்கிறார், இங்கே சொன்ன மாதிரி வெளியே அந்த புத்தகங்கள் கிடைக்கும், கண்டிப்பாக படியுங்கள்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு அந்த புத்தகத்தினுடைய தலைப்பு ”திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை”, அதுதான் என்னுடைய முதல் ஒரு புத்தக அறிமுக விழா.அதில்  நான், அண்ணன் சுப.வீ, அண்ணன் எழிலரசன் அவர்கள் கலந்துகொண்டோம். அப்போது நான் அவரிடத்திலே ஒரு வேண்டுகோள் விடுத்தேன், அந்த புத்தகமும் கிட்டத்தட்ட  1400 பக்கம். அப்போது நான் சொன்னேன், இந்த புத்தகத்தை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது, கண்டிப்பாக வரலாறு இருக்கு. இவ்வளவு பெரிய வரலாறு யாருக்கும் கிடையாது.

ஆனால் இதை சிறிய புத்தகங்களாக பதிவு செய்ய வேண்டும், எல்லோரிடமும் கொண்டு போய் சேர்ப்பதற்கும் , படிப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று சொன்னேன். அதே மாதிரி இப்போது இந்த புத்தகம் இப்போது சுமார் 250 பக்கம்தான். கண்டிப்பாக இது எல்லோரும் நீங்கள் வாங்கி கரு.பழனியப்பன் அவர்கள் சொன்னார் வாங்குங்கள் படிக்காதீர்கள் என்று சொன்னார், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர் சரியாக சொன்னார்…

ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது படிங்க என்றார். அப்படி படித்தால் கண்டிப்பாக நிப்பாட்ட மாட்டீர்கள். ஏனென்றால் கலைஞர் உடைய எழுத்துக்கள் அப்படிப்பட்ட எழுத்துக்கள், அதில் எழிலரசன் அவர்கள் சொன்னார்…  திருவாரூர் முதல் திருவல்லிக்கேணி வரை என்று…  கலைஞர் கடைசியாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது திருவாரூர் சட்டமன்ற தொகுதியில், நான் இப்போது திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புத்தகத்தை வெளியிட வந்திருக்கிறேன். அதிலே எனக்கு மிகப்பெரிய பெருமை என தெரிவித்தார்.

Categories

Tech |