தனுசு ராசி அன்பர்களே..!
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
கொடுத்த பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமணத்தடை அகலும். மனதில் கவலை மற்றும் பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களின் பேச்சே உங்களுக்கு எதிர்ப்பினை உண்டாக்கக் கூடும். யோசித்து பேசவேண்டும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். முன்னேற்ற சூழலில் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் வந்துச்சேரும். வெளிநாடு வாய்ப்புகள் நல்லபடியா இருக்கும்.
வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். காரியத்தை நீங்களே முன்னின்று செய்வது ரொம்ப நல்லது. மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கும் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன் நிறம்.