மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைக்காலை ஆட்சியர் வழங்கினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் இரண்டு மாற்று திறனாளிகளுக்கு கரவை மாடு வாங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வங்கிக் கடன் உதவியும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 26 ஆயிரத்து 800 மதிப்பிலான செயற்கை கால் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மயில், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகன் என பலர் கலந்து கொண்டார்கள்.