Categories
தேசிய செய்திகள்

“சூப்பரோ சூப்பர்”…. ஓய்வூதியதாரர்களுக்கு கடன் வசதி…. பிரபல வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல்வேறு பண தேவைகள் இருக்கும் பட்சத்தில் அதனை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான கடன் திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் சில வங்கிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு கடன் வசதிகள் உள்ளன.ஆனால் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி பிரத்தியேகமாக ஓய்வூதியதாரர்களுக்காக கடன் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்கள் பெரும் பென்ஷன் தொகைக்கு ஏற்றவாறு கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.அதாவது 70 வயதுக்குட்பட்ட ஓய்வூதியத்தாளர்கள் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையும் குறைந்தபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரையும் கடன் பெற்றுக் கொள்ளலாம்.அது மட்டுமல்லாமல் பென்ஷன் தொகையில் 18 மடங்கு கடனாகவும் பெரும் வசதி உள்ளது.

70 முதல் 75 வயது வரையிலான ஓய்வூதியதாரர்கள் 7.5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.75 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் 5 லட்சம் ரூபாய் வரை பென்ஷன் தொகையில் 12 மடங்கு கடன் தொகையாக பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.அப்படி கடன் வாங்கும் ஓய்வூதியத்தாளர்கள் இந்த கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும். 75 வயதை கலந்தவர்கள் இரண்டு வருடத்திற்குள் கடன் தொகையை திருப்ப செலுத்த வேண்டும் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.

Categories

Tech |