சென்னை மாநகர பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில் இருந்து திருவெற்றியூர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி இரண்டு கால்களையும் தரையில் உரசி சாகசம் செய்தார்.
அதனை பயணி ஒருவர் தவறு செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியது.இதனைத் தொடர்ந்து போலீசார் வீடியோ பதிவை வைத்து விசாரணை நடத்தி அந்த மாணவர் அணிந்து வந்த சீருடை வைத்து அடையாளம் கண்டனர்.மேலும் அவர் கொங்கு பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த மாணவரை போலீசார் கைது செய்து அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.