மீனம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லது. லேசாக உடல்நிலையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் கொஞ்சம் இருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதது போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் நீங்கள் அனுசரித்துச் செல்வதால் நன்மைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். திருமண முயற்சிகள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று காதலர்களுக்கு நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாகத்தான் இருக்கும்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழலில் இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவியும் கிடைக்கும். ஆசிரியர்களின் முழு ஆதரவுடன் சில முக்கிய பணிகளையும். இன்று நிறைவேற்றுவீர்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் நிறைவேற்றும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று சிவராத்திரி என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே முடிந்தால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் வந்து குவியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும்3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்